சபரிமலை சுவாமி ஐயப்பன் கதை

முன்னொரு சமயம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தை பங்கிடுவதற்கு பாற்கடலை கடைந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய பெண்ணாக மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிட்டு தருவதாகக் கூறினார்.

அங்கே வந்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். சிவபெருமானுக்கும், மோகினிக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரே ஐயப்பன் ஆவார்.

ஐயப்பனின் அவதார நோக்கமே மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்வதாகும். மகிஷம் என்றால் எருமை என்று பொருள்படும். மகிஷி எருமை முகமும், மனித உடலும் உள்ள அரக்கி.

அவள் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்ம தேவரிடம் தனக்கு இறவா வரம் வேண்டினாள். உலகில் பிறந்த உயிர்கள் என்றாவது ஒரு நாள் இறக்க வேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு அவள் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சக்தியால் தனக்கு மரணம் நிகழவேண்டும் என்ற வரத்தினை வேண்டினாள்.

மேலும் தனக்கு ஒப்பற்ற ஆற்றலை வழங்கும்படி வேண்டினாள். தான் பெற்ற ஒப்பற்ற ஆற்றலை பயன்படுத்தி உலக மக்களை துன்புறுத்தி வந்தாள். இந்நிலையில் சிவனும், மகாவிஷ்ணுவும் தங்களுக்கு பிறந்த குழந்தையின் கழுத்தின் கண்டத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டி சபரி மலைக் காட்டின் நடுவில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அப்பொழுது சிவ பக்தரான பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சபரிமலைக் காட்டிற்கு வந்தார். காட்டின் நடுவே குழந்தையின் அழுகுரல் கேட்டு, குழந்தையைத் தேடி, கண்டுபிடித்தார். கழுத்தின் கண்டத்தில் மணிகட்டி இருந்ததால் கண்டெடுத்த குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

குழந்தைப் பேறு இல்லாத ராணி மணிகண்டனை தனக்கு கடவுள் கொடுத்த பரிசாக எண்ணி தன் மகனைப் போல வளர்த்து வந்தார். குழந்தையான மணிகண்டன் சற்றே பெரியவனானதும் மகாராஜா ராஜசேகர பாண்டியன் கல்விகற்க குருகுலத்திற்கு அனுப்பிவைத்தார்.

குருகுலத்தில் மணிகண்டன் கல்வியை கசடறக் கற்றான். குருவிற்கு எல்லாவித உதவிகளையும் செய்து வந்தான். குருவின் மகனான‌ வாய் பேச முடியாத, காது கேட்காத சிறுவனுக்கு வாய்பேசவும், காதுகேட்கும் சக்தியையும் வழங்கினான். குருகுலக் கல்வியை முடித்தவுடன் அரண்மனை திரும்பிய மணிகண்டனுக்கு அரசன் இளவரசு பட்டம் சூட்ட எண்ணினான்.

அப்போது அரசனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. எனினும் அரசனோ, அரசியோ எந்த வித வேறுபாடும் மணிகண்டனிடம் காட்டவில்லை. மணிகண்டனும் தனது தம்பியிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்தான். இராசசேகர பாண்டியன் அரசவையில் இருந்த மந்திரி ஒருவனுக்கு மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது பிடிக்கவில்லை. இதை எப்பிடியாவது தடுத்துவிட எண்ணினான்.

அரசனிடம் மணிகண்டன் யார் என்று தெரியாது, காட்டிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை எனவே அரசனுக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று வாதிட்டான். அந்த வாதத்தினைக் கேட்ட அரசன் கடும் கோபம் கொண்டு மணிகண்டன்தான் தனது மூத்த மகன் என்றும், அவனுக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்றும் கூறிவிட்டார்.

அதன்பின் மகாராணியிடம் சென்று மணிகண்டனுக்கு இளவரசு பட்டம் சூட்டக் கூடாது என்றும், ராணிக்கு பிறந்த குழந்தைக்கே இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று கூறினான். முதலில் மகாராணி இதனைக் கேட்டு கோபப்பட்டாலும், மந்திரி ராணியின் மனதினை மாற்றினான்.

ராணி மனம் மாறி தன் மகனுக்கு எவ்வாறு இளவரசு பட்டம் சூட்டுவது என்று யோசிக்கையில், மந்திரி ராணியிடம், ராணிக்கு தீராதவயிற்று வலி என்றும், வலி தீர, புலியின் பால் தேவை என்றும், புலியின் பாலைக் கொண்டுவர மணிகண்டனை அரசன் பணிக்க வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மந்திரி மேற்கொள்வதாக கூறினான்.

மந்திரி கூறிய யோசனைக்கு ராணியும் உடன்பட்டு தனக்கு தீராதவயிற்று வலி உள்ளதாக அரசனிடம் தெரிவித்தாள். அரசன் அரண்மனை வைத்தியரை அழைத்து வைத்தியம் பார்க்கச் சொல்ல, மந்திரியின் கையாளான வைத்தியர் புலிப்பால்தான் ராணியின் நோய்க்கு மருந்து என்று அரசனிடம் கூறினான்.

இதனைக் கேட்ட அரசர் புலிப்பால் கொண்டு வருவோர்க்கு நாட்டில் பாதி தருவதாகக் கூறினான். ஆனால் யாரும் புலிப்பால் கொண்டு வருவதற்கு தயார் இல்லை. இதனைக் கண்ட அரசன் வருத்தமடைந்தான். அரசனின் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன், தான் புலிப்பால் கொண்டு வருவதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட மன்னன் மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதற்கு காட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கூறினான். ஆனால் மணிகண்டன் பிடிவதாமாக தான் மட்டும் தனியாகச் சென்று புலிப்பால் கொண்டு வருதாகக் கூறி காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

காட்டினுள் சென்ற மணிகண்டன் குடிசை ஒன்றினுள் தங்கினான். அப்போது எருமைத்தலையுடன் மகிஷி அங்கியிருந்தோரை துன்பப்படுத்துவதைக் கண்டான். மகிஷியுடன் போர்புரிந்து இறுதியில் மணிகண்டன் மகிஷியை கொன்றுவிட்டான்.

மகிஷியின் உடலிருந்து சாப விமோசனம் பெற்ற பெண் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் வேண்ட தான் பிரம்மசாரி எனவும், தன்னால் திருமணம் செய்ய இயலாது எனவும் தெரிவித்துவிட்டார்.

மகிஷியிடமிருந்து விடுதலை பெற்றவுடன் தேவர்கள் ஐயப்பனை மனமார வாழ்த்தினர். இந்திரன் ஆண்புலியாகவும், மற்ற தேவர்கள் பெண் புலியாகவும் மாற, ஐயப்பன் ஆண் புலியின் மீது ஏறி பந்தள நாட்டிற்குள் வந்தார்.

அதனைக் கண்ட அரசன் ஐயப்பனிடம், ராணி மந்திரியின் வஞ்சகப்படி ஐயப்பனைக் கொல்வதற்காக தனக்கு வயிற்றுவலி எனவும், புலிப்பால்தான் நோய்க்கு மருந்து எனவும், புலிப்பாலைக் கொண்டுவர ஐயப்பன் காட்டிற்கு செல்கையில் புலியினால் மரணமடைந்தால் தனது மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டவும், எண்ணி வயிற்றுவலி என நாடகமிட்டாள் என்ற உண்மையைக் கூறி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், மன்னித்து புலிகளை காட்டிற்குள் அனுப்பிவிட்டு இளவரசு பட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறினான்.

அதற்கு ஐயப்பன், தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் (மகிஷியை வதைப்பது) தான் மீண்டும் தேவலோகம் செல்லப் போவதாகக் கூறினார். மேலும் தன் நினைவாக தன் அம்பு விழும் இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.

ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அந்த இடத்தில் இராஜசேகரபாண்டியன் ஆலயத்தை ஏற்படுத்தினார். மேலும் ஐயப்பன் தன் அருளைப் பெற வேண்டும் எனில் 41 நாட்கள் சுத்த சைவ உணவினை உண்டு, பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டு மனக் கட்டுப்பாட்டுடன் சபரிமலைக்கு யாத்திரைச் செல்ல வேண்டும் என்று அருளினார்.
Share:

6 comments:

  1. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  2. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ReplyDelete
  3. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    ReplyDelete
  4. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    ReplyDelete
  5. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    ReplyDelete
  6. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    ReplyDelete

Powered by Blogger.

Popular Posts