பழைய கோவில்களில் உள்ள அதிசயமான
கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள்
ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு.
மேற்கண்ட
வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி
கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில்
அதிசயம் எதுவுமில்லை. ஆனால், நந்தி சிவபெருமானுக்கு எதிர்ப்புறமாக இல்லாமல்
நேர் மேலே இருக்கிறது. அதைவிடவும் அதிசயம் என்ன வென்றால் அந்த நந்தியின்
வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக
அமைகிறது.
அந்த செய்தி ஆச்சரியமானதாக
இருந்தாலும், அதிசயமாக இருப்பது நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர்
ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான். அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு
வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த
நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு
அந்த நீர் எதிரில் உள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் கலந்து விடுவதுபோல
செய்யப்பட்டுள்ளது.
நந்தியின் வாயில் இருந்து
பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும்
சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது
என்பதை யாராலும் அறிய இயலவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி
இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும்
பக்தர்கள் நம்புகின்றனர்.
0 comments:
Post a Comment