400 வருஷத்துக்கு முன்பு இருந்த சங்கராச்சார்யர்ல ஒருத்தர், தன்னுடைய கேரள சீடர்களோட தங்கி இருந்த குடில்ல, ஒரு ஸ்ரீ சக்ரம் வச்சு வழிபட்டு வந்தாராம். ஒருநாள் ஸ்ரீசக்ரம் திரும்ப வரவே இல்லையாம். எடுத்து பார்த்தும் வரவே இல்லையாம். அதனால, அங்கயே அவர் தங்கியிருந்து பல சித்துக்கள் செய்து சமாதியாகிட்டாராம். அந்த ஸ்ரீ சக்ரம் இருந்த இடத்தில புற்று வளர ஆரம்பிச்சுச்சாம்.
அப்ப அங்க விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதன்மேல் தடுக்கி விழ அதிலிருந்து இரத்தம் வந்துச்சாம். உடனே ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் சொன்னாங்களாம் . மன்னரும், நம்பூதிரிகளை வர வச்சு தேவ பிரசன்னம் பார்த்ததில் அங்க தேவி குடியிருப்பது தெரிஞ்சதாம்.
உடனே மன்னர் அதை சுற்றி சிறிய கோவில் கட்டினாராம். காலபோக்கில் அம்மன் சக்தி அறிந்து பெரிய கோவிலாக கட்டினார்களாம். ஆரம்பத்தில மந்தைகாடுன்னு ஆடு மாடு மேய்க்கும் இடமா இருந்துச்சாம்.அதுதான் காலப்போக்கில் மருவி ”மண்டைக்காடு” ன்னு பெயர் வந்துச்சாம். இங்க இருக்கும் புற்று வளர்ந்து கிட்டே இருக்கிறதாம். இப்ப 15 அடிக்கு மேல அந்த புற்று வளர்ந்திருக்குதாம்.
0 comments:
Post a Comment